சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.40,440 ஆக அதிகரித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலியாக பங்குசந்தைகளும் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று கடும் சரிவை கண்டுள்ள நிலையில், தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.40,440 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,055க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.1.80 உயர்ந்து ரூ. 75.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், உக்ரைன்-ரஷ்யா போர் தொடரும் பட்சத்தில் தங்கம் விலை இதே வேகத்தில் உயர்ந்து கொண்டு தான் இருக்கும் என ஆய்வாளர்கள் கூறி வருகின்றன.