“உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையம்..” முதலமைச்சர் ஸ்டாலின் முன் ஒப்பந்தம்..!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈட்டன் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களை ஈற்பதற்காக அமெரிக்க அரசு முறை பயணம் சென்றுள்ளார்.. அமெரிக்க சென்ற நாளில் இருந்து ஒவ்வொரு தொழில் நிறுவனங்களுடனான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு வந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனத்துடன் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தியை பெறுக்கும் வகையில் கையெழுத்திடப் பட்டுள்ளது..
மேலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையம் (Global Utility Engineering Centre) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைழுதிடப்பட்டுள்ளது..
இதுகுறித்த பதிவுகளை முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், அஷ்யூரண்ட் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் பிஜு நாயர் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே. விஷ்ணு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..