சிறுமியிடம் ரேஷன் கடை ஊழியர் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கொங்குப்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர், தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தனர்.
அதில், ”எங்களுக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவர், பள்ளியில் படித்து வருகிறார். கோல்காரனூரைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் ஹரிகிருஷ்ணன் (35) என்பவர், எங்கள் மகளிடம் அடிக்கடி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியிருந்தனர்.
இந்த புகாரின் பேரில், காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஹரிகிருஷ்ணன் மீதான புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள ஹரிகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.