அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பும் – தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவும் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு எதிரான நிறவெறி நிலவும் வீடியோ அங்கு ஒளிபரப்பப்பட்டது.
பின்னர், செய்தியார்கள் சந்திப்பின் போது, என்பிசி செய்தி நிறுவனத்தின் செய்தியாளர், ட்ரம்பிடம் கத்தார் வழங்கும் விமானம் குறித்த கேள்வியை முன்வைத்தார். இந்தக் கேள்வியைக் கேட்டதும் ஆத்திரமடைந்த ட்ரம்ப், “நீங்க என்ன பேசுறீங்கனு உங்களுக்கே தெரியுமா? இந்த நிகழ்ச்சிக்கும் கத்தார் வழங்கும் ஜெட் விமானத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
தென்னாப்பிரிக்காவுல வெள்ளையர்களுக்கு எதிராக நடக்கும் விவகாரம் குறித்து பேசாம இந்த தலைப்புலிருந்து விலகிப்போக முயற்சிப்பது சரியா? நீங்க ஒரு மோசமான நிருபர். முதல்ல, ஒரு நிருபரா இருக்க தேவையான போதுமான புத்திசாலித்தனம், அறிவு உங்ககிட்ட சுத்தமாக இல்லை. நீங்க திரும்பவும் உங்க ஸ்டுடியோவுக்கு போகலாம்.
இனிமே உங்ககிட்ட இருந்து எந்த கேள்வியும் வரக்கூடாது. அமெரிக்க விமானப்படைக்கு வழங்கப்பட்ட ஒரு ஜெட் விமானம் நல்ல விஷயம். அவர்கள் ஜெட் விமானத்துடன் கூடுதலாக 5.1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகளையும் கொடுத்துள்ளனர்’ என்று கத்தினார்.
சமீபத்தில் கத்தார் நாட்டுக்கு ட்ரம்ப் சென்ற போது, அந்த நாட்டு மன்னர் ஏர்போர்ஸ் ஓன் போல பயன்படுத்துவதற்காக 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள போயிங் விமானத்தை அமெரிக்க விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.