சமையல் ராணிகளுக்கு சில சமையல் குறிப்புகள்…!
சப்பாத்திக்கு கோதுமை மாவு அரைக்கும் போது அத்துடன் 50 கிராம் சோளம் மற்றும் 50 கிராம் சோயா ஆகியவற்றையும் சேர்த்து அரைத்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி நல்ல மென்மையாக இருக்கும்.
வீட்டில் பாயாசம் செய்யும்போது அது ஹோட்டல் டேஸ்டில் சுவையாக இருக்க, முந்திரி, பாதாம், தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்து அதனை பாயாசத்தில் சேர்த்து இறக்கினால் பாயாசம் சுவையாக இருக்கும்.
பாதாம் மற்றும் முந்திரியை அரைக்கும் சமையத்தில் அதனை முன்பே சூடான நீரில் ஊற வைத்து பின் அரைத்தால் நன்றாக மென்மையாக அரையும்.
எந்தவிதமான கட்லெட் செய்யும்போதும் அத்துடன் சில பிரட் துண்டுகளை அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
தயிர் அதிகமாக புளித்து விட்டால் அதில் டம்ளர் தண்ணீரை ஊற்றி அரை மணி நேரம் கழித்து அந்த நீரை வடித்து விட்டால் தயிர் புளிக்காது.
சமையல் அறையில் கரப்பான் பூச்சி தொல்லை வராமல் இருக்க வெற்றிலையை கசக்கி அலமாரியில் வைத்தால் வராது.
பூண்டை எளிதாக உறிக்க சிறிது நேரம் தண்ணீரில் போட்டு வைத்து உறித்தால் ஈசியாக இருக்கும்.
அடிக்கடி ஏப்பம் வருவதை நிறுத்த சீரகப்பொடியுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் ஏப்பம் நின்றுவிடும்.
வீட்டில் எறும்பு தொல்லை நீங்க சிறிது மஞ்சள் தூள் அல்லது உப்பை எறும்பு இருக்கும் இடத்தில் போடலாம்.
வெங்காயம் நறுக்கும் நேரத்தில் கண்களில் நீர் வடியாமல் இருக்க கத்தியை சூடு செய்து வெட்டினால் கண்களில் நீர் வராது.