8 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்..!! பின்னணியில் இருந்த அந்த 5 பேர்..?
தற்போது தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டது என சொல்லலாம்.., அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும்.., ஒரு சிலர் கஞ்சா கடத்துவது விற்பனை செய்வது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள படாளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நடராஜபுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக படாளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பெயரில் காவல்துறையினர் நடராஜபுரத்தில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை நடத்தியதில் வீட்டில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த சுமார் 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட தினேஷ், குபேந்திரன், வீரமருது, கிருபாகரன் மற்றும் ராஜேஷ் உட்பட ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்து மதுராந்தகம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அப்பகுதியில் இந்த கடத்தல் வழக்கில் வேறு யாராவது சம்பந்தப்பட்டு உள்ளார்களா..? அல்லது வேறு எங்கெல்லாம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளது., கஞ்சா எங்கிறருந்து கடத்தி வரப்பட்டது..? என பல்வேறு கோணங்களில் படாளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கஞ்சாவின் மதிப்பு சுமார் எட்டு லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.