கூட்டு பாலியல் வன்கொடுமை..!! ஆணுறுப்பை வெட்டிய செவிலியர்..!!
தற்போது பெண்களை வளர்ப்பது தான் மிகவும் சவலான ஒன்றாக மாறிவிட்டது.. பெண்பிள்ளைகள் மட்டுமா குழந்தைகள் மற்றும் பெண்கள், வயதானவர்கள் என பலரும் வெளியில் சென்று வீடு திரும்பும் வரை எப்போதும் அச்சதுடன் இருக்க வேண்டிய சூழல் நிலவியுள்ளது காரணம் பாலியல் வன்கொடுமை.., எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை தான் நடந்து கொண்டு இருக்கிறது…
பீகார் மாநிலம் சமஸ்திபூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த பெகுசராய் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சஞ்சய் குமார், வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த சுனில் குமார் குப்தா மற்றும் மங்க்ரா பகுதியைச் சேர்ந்த அவதேஷ் குமார் ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு மதுபோதையில் அந்த பெண் செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர்.
இதனால் அச்சம் அடைந்த அந்த செவிலியர் தன் கையில் கிடைத்த பிளேடை எடுத்து டாக்டர் சஞ்சய் குமாரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார். இதனை கண்ட மற்ற இரண்டு மருத்துவர்களும் அந்த பெண் செவிலியரை தாக்க முயற்சித்துள்ளனர்.. பின் அவர்களை கீழே தள்ளிவிட்டு அந்த பெண் செவிலியர் காவல் நிலையத்தில் தனக்கு நடந்த கொடூரம் பற்றி தெரிவித்துள்ளார் ., அதன்பேரில் மருத்துவமனைக்கு வந்த எஸ்பி வினய் திவாரி தலைமையிலான குழு, மருத்துவர் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்..
இதில், காயமடைந்த மருத்துவர் சஞ்சய் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் வன்கொடுமை செய்ய வந்தவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தற்காப்பிற்காக மருத்துவரின் ஆணுறைப்பு துண்டித்ததாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து செவிலியரை விடுவித்தனர்..
மேலும் மருத்துவமனையில் ரத்தக்கறை படிந்த பெட்ஷீட்கள், செல்போன்கள் மற்றும் மதுபாட்டில்களை கைப்பற்றினர்., மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று இரவு முதல் வேலை செய்யவில்லை அதாவாது மருத்துவர்கள் அந்த பெண் செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த போது மருத்துவர் சுனில் குமார் குப்தா அதை உடைத்தது விசாரணையில் தெரியவந்தது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..