விநாயகர் சிலை கரைப்பு..! பலத்த பாதுகாப்பில் செல்லும் விநாயகர்..!!
சென்னையில் 2வது நாளாக இன்று விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகிறது. இன்று விநாயகர் சிலை கரைப்பு என்பதால் ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மேலும் கடற்கரைகளில் ட்ராலி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாலமாக கொண்டாடப்பட்டது.., நேற்றுடன் விநாயகர் சதுர்த்தி முடிவடைந்த நிலையில் நேற்று முதலே விநாயகர் சிலைகளை கரைக்கும் பணி தொடங்கி உள்ளது.
சென்னையை பொறுத்த வரை 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முதல் ஏராளமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகிறது. இன்று 2வது நாள் விநாயகர் ஊர்வலம் சென்னையின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது..
விநாயகர் சிலை கரைப்பு பகுதிகளில் விபத்துகளை தடுக்க பல கட்டுபாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் வகையில் ட்ராலியும், பிரம்மாண்ட சிலைகளை தூக்கி செல்ல கிரேன் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடையாறு, கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நீலாங்கரை கடற்கரையிலும், தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், கொடுங்கையூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகள்காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியிலும், திருவொற்றியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..