மத்தூர் அருகே அம்பேத்கர் உருவ படம் பொறித்த பெயர் பலகையை மறைத்து விநாயகர் ஆலயம் என்ற பெயர் பலகையை பக்கத்து கிராம மக்கள் வைத்த நிலையில் நேற்று இரவு நரால் சந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் இருந்ததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு : நிலம் அளவீடு பணிகள் செய்த பிறகு பெயர் பலகை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள நரால் சந்தம்பட்டி கிராமத்தில் அம்பேத்கர் உருவம் பொறித்த பெயர் பலகை ஒன்றை கிராம மக்கள் வைத்து உள்ளனர் இந்நிலையில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சைதாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் விநாயகர் ஆலயம் சைதாப்பேட்டை செல்லும் வழி என்ற பெயர் பலகை ஒன்றை அம்பேத்கர் போர்டை மறைக்கும் விதத்தில் வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு நரால்சந்தம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் தலித் இன மக்களுக்கு ஆதரவாக பேசி வந்த போராளி ராஜேஷ் என்ற இளைஞர் மர்மமான முறையில் இறந்ததாகவும் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது என விடுதலை சிறுத்தை கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிராமத்தில் குவிந்தனர்.
இதனால் பரபரப்பான சூழல் நிலவி வந்த நிலையில் அங்கு வந்த போச்சம்பள்ளி வட்டாட்சியர் மோகன் இந்த இடத்தை அளவிடு பணிகள் செய்யப்பட்டு சமாதான குழு பேச்சுவார்த்தை நடத்தி பெயர் பலகை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் குபேந்திரன் கூறுகையில் விரைந்து பெயர்ப்பலகை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் விடுதலைக் கட்சிகளின் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்றும் அப்பகுதியில் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்டு மீண்டும் தாழ்த்தப்பட்ட இன மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
Discussion about this post