கொடைக்கானல் செல்ல பொது மக்களுக்கு தடை..!!
கொடைக்கானல் மோயர் சதுக்கம் பகுதியில் தரை கடைகளை யானை சேதப்படுத்தி உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ள மோயர் சதுக்கம் பகுதியில் உள்ள தரைக்கடைகள் சுமார் 10க்கும் மேற்பட்டவைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளது.
இதனை அறிந்த தரைக்கடை வியாபாரிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தரைக்கடை வியாபாரிகள் செல்வதற்கு வனத்துறை தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
மேலும் சுற்றுலா பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..