இந்த ஆண்டு ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி தலைமை பொறுப்பை ஏற்றார். இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள 40க்கும் மேற்பட்ட தலைவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜி20 நாடுகளில் ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, கொரியா குடியரசு, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, துருக்கி, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. ஆகையால் இதற்கான ஆலோசனை கூட்டத்திற்கு முக்கிய தலைவர்கள் அழைக்ப்பட்டுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்குபெற தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மற்றும் பல முக்கிய தலைவர்கள் ஒன்றாக சந்திக்க உள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தலின் கூட்டணி குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்வை முடித்துவிட்டு இன்று இரவே அதே தனி விமானத்தில் முதல்வர் சென்னை திரும்புவார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது ஆனால் ஓ.பண்ணீர்செல்வத்திற்கு அழைப்பு வராதது அதிமுக வில் கூடுதல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.