தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 6வது ஆண்டு நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்ட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல முறை முதல்வராக இருந்தும் முதல்வர்கவே இருக்கும் போதும் தவறிய ஜெயலலிதா உயிரிழந்து இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அவரது இழப்பிற்கு தமிழ்நாடு மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. அவரது ஆட்சிக்காலங்களில் தமிழ்நாட்டின் பல நலத்திட்டங்களை பல்வேறு முன்னேற்றங்களுக்கு அவரின் பங்கு மிக பெரியது என்பது மறுக்க முடியாதாது. உடல்நல குறைவால் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திடீரென அவரின் இறப்பு செய்தி வெளியானது இன்று வரை அந்த இறப்பின் மீது பல கேள்விகள் எழுப்பப்படுகிறது. அதற்கான விசாரணைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அதிமுக பல தரப்பு தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் , கேபி முனுசாமி, கோகுல இந்திரா, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், பி.கே.எம்.சின்னையா, ஓஎஸ் மணியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின் எடப்பாடி பழனிசாமி தன்னை மீறி கண்களில் கண்ணீருடன் காணப்பட்டார்.
பின்னர் மற்றொரு தரப்பினரான ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவரது ஆதரவாளர்களும் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.மேலும், ஜெ. தீபா, சசிகலா மற்றும் ttv தினகரன் உள்ளிட்டோர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
பின்னர் தமிழகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள் ஜெயலலிதா புகைபடத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் அதிமுகவின் தொண்டர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மெரினா நினைவிடத்தில் பல மக்கள் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் மெரினா கடற்கரையில் கூட்டம் அலைமோதியுள்ளதால் 600கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பிற்க்காக குவிக்கபட்டுள்ளனர்.