பகலில் உல்லாசம் இரவில் திருட்டு..!! போலீஸ் விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்..!!
செல்போன்களை திருடி அதை குறைந்த விலைக்கு விற்பனை செய்துவிட்டு பெண்களுடன் உல்லாசம், கஞ்சா, மது என உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த இருவரை இரவு பகல் கண்விழித்து கைது செய்த செம்மஞ்சேரி தனிப்படையினர். 8 செல்போன், ஒரு பைக் பறிமுதல்.
சென்னை சோழிங்கநல்லூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் தங்கி இருந்த வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத நபர் 9 செல்போன்களை திருடியதாக தினேஷ் சந்திரன்(32) செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் கிளாட்சன் ஜோஸ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், ராஜு, தலைமை காவலர்கள் நாகராஜ், யாசர் அரபாத், காவலர் மணி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்தனர்.
தனிப்படையினர் செல்போன் திருடுபோன வீட்டில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒருவர் மதில்சுவர் எகிறி குதித்து உள்ளே புகுந்து அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் 9 செல்போன்களை திருடிக் கொண்டு அங்கிருந்த பைகளில் திருடிய செல்போன்களை போட்டு வெளியே எடுத்து வந்துள்ளது.. சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
அதை தொடர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்டது சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளியான சுரேந்தர்(23) என்பது தெரியவந்ததை தொடர்ந்து சுரேந்தரை இரவு பகல் என இரண்டு நாட்களாக பின் தொடர்ந்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அதை தொடர்ந்து சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சூர்யா (எ) வெட்டுக்கிளி சூர்யா(24) என்ற இளைஞரை கைது செய்தனர். கைதான இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பகலில் உல்லாசம், இரவில் கொள்ளை சம்பவம் என டைம் டேபிள் போட்டு திருடி வந்துள்ளனர் சுரேந்தர் மற்றும் சூர்யா என்கின்ற வெட்டுக்கிளி சூர்யா இருவரும். பகலில் சென்று காவலாளி இல்லாத ஆண்கள் விடுதி எங்கெல்லாம் உள்ளது என்று நோட்டமிட்டுக் கொண்டு இரவு சுமார் ஒரு மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அந்த பகுதியில் சென்று உள்ளே புகுந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களின் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதேபோல் 9 செல்போன்களை திருடிய இடத்தை பகலில் நோட்டம்மிட்டுக் கொண்டு இரவில் சென்று மதில்சுவர் எகிறி குதித்து உள்ளே சென்று அனைவரும் ஆழந்த உறக்கத்தில் இருந்தபோது 9 செல்போன்களை திருடிக் கொண்டு வந்துள்ளதும், மதில்சுவரை எகிறி குதித்து சுரேந்தர் உள்ளே சென்று செல்போன் திருட வெளியே யாரேனும் வருகிறார்களா என்று திருடுவதற்கு பாதுகாப்பு பணியில் சூர்யா வெட்டுக்கிளி சூர்யா ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான ஒருவரிடம் இருந்து திருடப்பட்ட 8 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் மேலும் ஒரு செல்போன் எங்கே என கேட்டபோது 2000 ரூபாய்க்கு விற்பனை செய்து மது, கஞ்சா என உல்லாசமாக இருந்ததாக விசாரணையில் கூறியதாக தெரியவந்தது.
மேலும் இரவு நேரத்தில் திருடப்படும் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை சென்னை பர்மா பஜார் பகுதியில் 25,000 மதிப்புள்ள செல்போனை குறைந்த விலைக்கு 2000 ரூபாய்க்கு விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்துக் கொண்டு பெண்களுடன் உல்லாசம், கஞ்சா புகைப்பது, மது அருந்துவது என வாழ்க்கையில் வெயர்வை சிந்தாமல் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..