இன்றைய உலகில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது இக்காலகட்டத்திற்கு செல்போன் இன்றியமையாத ஒன்றாகவும் மாறியுள்ளது. தங்களது போன்களில் அனைவரும் வாட்ஸ் அப்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
இது போன்ற சமூகவலைத்தளங்கள் மக்களுக்கு ஏற்றவாறு அவ்வப்போது புது புது அப்டேட்க்களை கொடுத்து பயனாளர்களை தக்க வைத்தும் வருகின்றனர். இதை தொடர்ந்து வாட்ஸ் அப் நிறுவனம் புது அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளது இந்த தகவலால் பயனாளர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். தற்போது உள்ள வ்தத்ஸ் அப்பை பொறுத்தவரை போன் மற்றும் கணினி மூலம் பயன்படுத்தி வருகிறோம்
தற்போது வாட்ஸ் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் அந்த அப்டேட்ட்டில் ‘companion mode ‘ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை பொறுத்தவரை ஒரே வாட்ஸ் அப் கணக்கை இரு போன்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் இதற்கு கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து இரு போன்களில் ஒரே வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்திக்கொள்ள முடியும்.