ஆசியன் மாநாடு என்பது ஆசியாவிற்கு தென்கிழக்கு பகுதியில் உள்ள 10 உறுப்பு நாடுகளின் சர்வதேச அமைப்பாகும் இதற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் என்றழைக்கப்படுகிறது. இதில் உக்ரைன் போர் குறித்து ஆலோசிக்கபட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. கம்போடியா தலைநகர் புனோம் பென்னில் நடைபெற்ற ஆசியன்-இந்தியா உச்சி மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவை சந்தித்து உக்ரைனில் நடக்கும் போர் மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தல்களை பற்றி பேசியதாகவும் அதில் சில ஆலோசனைகள் கூறியதாகவும் தெரிகிறது. இந்த சந்திப்பிற்கு பிறகு அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் தளத்தில் இந்த சந்திப்பில் உக்ரைனின் மோதல் உலகளவில் ஏற்படும் உணவு பற்றாக்குறை மற்றும் அணுசக்தி பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம் என்று தெரிவித்துள்ளார்.