திருநங்கைகளுக்கான இலவச கான்கிரீட் வீடுகள்.. ரிப்பன் வெட்டி திறப்பு..!
கரூர் மாவட்டம், மணவாசி சுங்கச்சாவடி அருகே திருநங்கைகள் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஏற்கனவே இலவச வீட்டு மனை பட்டா வழங்கி அதில் பல வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அருகில் உள்ள வீரராக்கியம் பகுதியில் செயல்பட்டு வரும் வி.கே.ஏ பால் பண்ணை என்ற தனியார் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் 7 திருநங்கைகள் குடும்பத்திற்கு ரூ.70 லட்சம் மதிப்பில் காங்கிரட் வீடு கட்டும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் கலந்து கொண்டு இலவச கான்கிரீட் வீடுகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து திருநங்கைகளின் பயன்பாட்டுக்கு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரசு அதிகாரிகள், பால் பண்ணை உரிமையாளர்கள் சாமியப்பன், கருப்பண்ணன் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-பவானி கார்த்திக்