அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடி..!! பணம் கேட்டால் கொலையா..?
அரியலூர் தா.பழூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த இரண்டு நபர்கள் கைது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் கீழசிந்தாமணி கிராமம் கீழத்தெருவில் முருகேசன் (64) என்பவர் அவர்களது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு இவரது இளைய மகன் பட்டப்படிப்பு முடித்து வேலையின்றி இருந்த நிலையில் கீழசிந்தாமணி சேர்ந்த ராஜசேகர்(34) மற்றும் தற்போது சென்னையில் வசித்து வரும் அரியலூர் மாவட்டம் தாதம்பேட்டையை சேர்ந்த கார்த்தி என்கிற கார்த்திகேயன் (37) ஆகியோர் முருகேசனின் இளைய மகனுக்கு அரசு வேலை (பொதுப்பணித் துறையில்) வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் பேசி முருகேசனிடம் இருந்து ரூபாய் 3,00,000 (மூன்று லட்சம்) பணம் கேட்டுள்ளனர்.
கார்த்தி தன்னை ஒரு பத்திரிக்கை நிருபர் என்று கூறிக்கொண்டு முருகேசனிடம் பலமுறை போனில் தொடர்பு கொண்டு பேசி பணம் கேட்டுள்ளார். இதனை நம்பிய முருகேசன் ரூபாய் 2,10,000 பணத்தை முன்பணமாக தந்து, மீத பணத்தை வேலை வந்தவுடன் தருவதாக கூறியுள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட எதிரிகள் ராஜசேகர் மற்றும் கார்த்திக் ஆகியோர் இரண்டு ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தர மறுத்துள்ளனர்.
மேலும் ராஜசேகர் முருகேசனை பணம் கேட்டால் வெட்டி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து முருகேசன் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவில், இது குறித்து புகார் அளித்தார். நீதிமன்ற நடுவரின் உத்தரவின்படி ராஜசேகரை ஜெயங்கொண்டம் கிளைச் சிறையிலும், கார்த்தியை திருச்சி மத்திய சிறையிலும் காவலர்கள் அடைத்தனர்.
மேலும் இவர்கள் இருவரும் மக்களை ஏமாற்றி பணம் பறித்து இதுபோன்று பல மோசடிகளை செய்ததாக தெரிய வருகிறது. இது குறித்து காவல்துறையினர் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..