மதுரை மாவட்டம் பரவையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி
மதுரை மாவட்டம் பரவையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உலக சிலம்பம் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீராம் கல்வி விளையாட்டு அகாடமியும் இணைந்து நடத்தும் நான்காம் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டிக்கு சிவகங்கை ராஜ்குமார் மகேஸ் துரை, பள்ளி நிறுவனர் ராமு, வழக்கறிஞர் படேல் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி ரமேஷ் இந்த போட்டிகளை துவக்கி வைத்தார்.
இந்த போட்டியில் மதுரை,திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 400 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
இந்த போட்டிகளில் பரவை முத்துநாயகி சிலம்பு அணி ஆசான் இளங்கோவன் தலைமையில் அதிகபரிசுகளை வென்று சுழல் கோப்பையை கைபற்றி சாம்பியன் பட்டம் பெற்றது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)