பில் பாஸ்க்கு நான்கு லட்சமா..? சிக்கிய அரசு அதிகாரி..!!
திருப்பூரில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி இளநிலை பொறியாளர் கைது ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல்
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் கந்தசாமி இவர் திருப்பூர் மாநகராட்சியின் சாலை ஒப்பந்த பணியை மேற்கொண்டு வருகிறார். தற்போது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சாலை ஒப்பந்த பணியை கந்தசாமி மேற்கொண்டு வரும் நிலையில் ஒப்பந்த தொகைக்கான பில்லை பாஸ் செய்வதற்கு, திருப்பூர் ராயபுரத்தில் உள்ள நான்காவது மண்டலத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றிய வரும் சுரேஷ் என்ற அதிகாரியிடம் ஒப்பந்த தொகைக்கான பில்லை பாஸ் செய்வது குறித்த ஆவணங்களை சமர்ப்பித்து கையெழுத்து கேட்டுள்ளார்..
ஆனால் அதற்கு சுரேஷ் நான்கு லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்., முதலில் தர மறுத்த கந்தசாமி பணம் கொடுத்தால் மட்டுமே வேலை முடிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டதால் சுரேஷிடம் முதலில் இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார்., அதனை பெற்றுக்கொண்ட சுரேஷ் இன்னும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே கையெழுத்து போடப்படும் என கூறியுள்ளார்.,
பின்னர் இதுகுறித்து கந்தசாமி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்., புகாரின் பேரில் லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரிகள் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை கந்தசாமி இளநிலை பொறியாளர் சுரேஷிடம் கொடுத்துள்ளனர்., அப்போது அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் சுரேஷை அதிரடியாக கைது செய்து இரு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..