ADVERTISEMENT
ஆளுநர் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.
சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
பஞ்சாப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதாக அம்மாநில ஆளுநருக்கு எதிராக, ஆம் ஆத்மி தலைமையிலான மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மக்களால் தோ்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள், சட்டப்பேரவைகளின் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை நசுக்க தனது அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தது.
ஆளுநர்கள் அதிகாரங்கள் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு ஆளுநருக்கும் பொருந்தும் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் ஆளுநர் ஆர்.என்.ரவி படித்து தெரிந்து கொள்ளவேண்டும் என ப.சிதம்பரம் தனது எகஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் ஆணை, பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல, எல்லாப் பகுதி ஆளுநர்களுக்கும் பொருந்தக்கூடியதே என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.