சீமான் பொய் சொல்கிறார் என்று திருமுருகன் காந்தி கூறியதால் பரபரப்பு..
சீமான் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை சந்தித்ததே இல்லை என்றும் அவரை சந்தித்ததாக சீமான் பொய் சொல்கிறார் என்றும் திருமுருகன் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்தாகவும் அவருடன் உணவு சாப்பிட்டதாகவும் பல மேடைகளில் பேசி உள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பிரபாகரனை சீமான் சந்தித்தது மற்றும் உணவு உண்டது என கூறியது முழுக்க முழுக்க பொய் என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழர், திராவிடர் என பிரிவினை ஏற்படுத்தி தமிழகத்தை சீமான் கூறு போடுகிறார் என்றும் விடுதலைப்புலிகள் கட்சி கொடியை தனது கட்சி கொடியாக பயன்படுத்துவதை சீமான் நிறுத்த வேண்டும் என்றும் திருமுருகன் காந்தி எச்சரித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.