சாலையின் நடுவே போதை ஆசாமி ஒருவர் செய்த செயலால் பரபரப்பு…
வேலூரில் நடு ரோட்டில் நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு தொல்லை கொடுத்த போதை ஆசாமியின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி செல்லும் சாலையின் நடுவே நாற்காலியில் போதை ஆசாமி ஒருவர் அமர்ந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகிய நிலையில், அப்பகுதியில் செல்லும் பெண்கள் அச்சமடைந்தனர்.
உடனடியாக வாகன ஓட்டிகள் குடியாத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடு ரோட்டில் நாற்காலியில் அமர்ந்தவாறு வாகன ஓட்டிகளுக்கு தொல்லை கொடுத்த போதை ஆசாமியை பொதுமக்கள் குண்டுகட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தற்போது, இந்த வீடிடோ காட்சி சமூகவலை தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
