எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என டிடிவி தினகரன் பதில்!!!
எந்த காலத்திலும் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பதில் அமமுக-வில் உள்ள யாருக்கும் விருப்பம் இல்லை என தெரிவித்த டிடிவி தினகரன், துரோகம், மற்றும் ஏமாற்று வேலை செய்வதுதான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நடைமுறை என விமர்சித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.