திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், அத்திப்பட்டு நந்தியம் பாக்கத்தில் 25 லட்சம் மதிப்பிலான சிமெண்ட் சாலை திறப்பு.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், நந்தியம் பாக்கம் அடுத்த அத்திப்பட்டு ராஜாஜி நகர் பகுதியில் தார் சாலை இல்லாமல் இருந்துள்ளது. அதற்காக அப்பகுதி மக்களின் 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். 30 ஆண்டுகளாக மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றி தராமல் இருந்துள்ளது.
இந்நிலையில் 25 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்து ஒரே மாதத்தில் மக்களின் 30 ஆண்டு கோரிக்கையை நிறை வேற்றி தந்துள்ளார். மீஞ்சூரை சேர்ந்த ஒன்றிய பெருந்தலைவர் “ஜி.ரவி” அவரின் செயலுக்கு அத்திப்பட்டு பொதுமக்கள் அனைவரும் நன்றி தெரிவித்து, அவருக்கு ராஜாஜி நகர் குடியிருப்போர் நலசங்கத்தின் சார்பில் சிறப்பு பாராட்டு கூட்டம் வைத்து, சாலையை திறந்துள்ளனர்.
முதலாவதாக எண்ணூர் மக்கள் நலசங்கம் சார்பில் அத்திப்பட்டு என்.டி.பி.சி கேட் முதல் எண்ணூர் மேம்பாலம் வரை உள்ள இடத்திற்கு மின்சார விளக்கு வசதி ஏற்படுத்தி தரகோரி, பெருந்தலைவர் ரவியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து செய்து வரும் பல நலத்திட்டங்களை வாழ்த்தியும் அவர்க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஒன்றிய கவுன்சிலர் நந்தியம் கதிரவன் முதலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ராஜாஜி நகர் குடியிருப்போர் நலசங்கத்தின் செயலாளர் சௌரிராஜன் வரவேற்புரை ஆற்றி கிராம பெரியவர்கள் கருணாகரன், பாஸ்கர் ரெட்டியார், சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்க நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் காலாவதி நாகராஜன், ராஜாஜி நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர்ராஜா, பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கிராம பொதுமக்கள், பெரியவர்கள் கலந்து கொண்டனர்.
Discussion about this post