திருப்பதி பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. தற்போது திருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இலவச மற்றும் ரூ.300 டோக்கனுக்கு அனுமதி அளித்து தேவஸ்தானம் அனுமதியளித்துள்ளது.
டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 டோக்கன் முன்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை தேவஸ்தானத்தின் இணையதள தொடங்கியது, தினமும் 35,000 டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது, முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் வரும் 27ஆம் தேதி அன்று காலை 10 பணிக்கு அதே இணையதள மூலம் திருமலையில் தங்கும் இடத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் பக்தர்கள் ஆர்ஜித சேவையில் பங்கேற்கவும் அதே இணையதளத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ள இன்று காலை பத்து மணியளவில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் வெளிடப்படவுள்ளது. மேலும் அந்த டிக்கெட்களில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் திருமலைக்கு வந்து தரிசனம் செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.