கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகுவதால் பருவமழை தீவரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பருவமழை தொடங்கியதிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன் வரை கனமழை பெய்து வந்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மழையால் பாதிப்புக்கு உள்ளாகின, குறிப்பாக மயிலாடுதுறை மற்றும் சீர்காலியில் வரலாறு காணாத மழை பொழிந்தது. சீர்காலியில் 44செ.மீ. வரை மழை பெய்ததால் நெற்ப்பயிரைகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
தற்போது சில தினங்களாக மழை பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் 19 மற்றும் 20 ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் கனமழை பொலியும் என்று அறிவித்துள்ளது.