இயக்குனர் அட்லீ இவர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான சங்கரின் துணை இயக்குனராக பணியாற்றி பின்னர் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் அட்லீ விஜயை தொடர்ந்து 3 படங்களை இயக்கி தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க செய்தார்.
இதுவரை தோல்வி முகம் காணாமல் இருக்கும் இயக்குனர்களில் இவரும் ஒருவர் அட்லீயின் அசுர வளர்ச்சியால் இந்தியாவின் மிக பெரிய நட்சத்திரமான ஷாருகானை இயக்கும் வாய்ப்பை பெற்று தற்போது அந்த படத்தை இயக்கி வருகிறார். ஆனால் இவர்மீது எப்போதும் ஒரு குற்றச்சாட்டு இருக்கும் அதுதான் கதை திருட்டு. இவர் இயக்கிய ராஜா ராணி முதல் பிகில் வரை அவரின் மேல் இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் அடுத்து ஷாருக்கானை வைத்து இயக்கும் ஜவான் படமும் திருட்டு கதை என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தான் தயாரித்த பேரரசு படத்தின் கதையை தழுவிதான் இயக்குனர் அட்லீ ஜவான் படத்தை இயக்கி வருகிறார் என்று புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இரு தரப்பினையும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விசாரித்த போது ஜவான் படத்திற்கும் பேரரசு படத்திற்கும் படத்தின் ஹீரோ இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது மட்டுமே ஒற்றுமை என்றும் அந்த அப்படத்தில் விஜயகாந்த் போலீசாகவும் ஜவான் படத்தின் ஷாருக்கான் ராணுவ வீரராகவும் நடிக்கிறார் என்று தெரிவித்தனர்.
மேலும் தயாரிப்பளர்கள் சங்கம் , மாணிக்கம் நாராயணனிடம் அவர் சொல்லும் புகாருக்கு, அவர் வைத்துள்ள ஆதாரங்களை கொண்டுவந்து சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது. இருப்பினும் படத்தில் கதநாகயனின் கதாபாத்திரம் வேறு வேறு தளத்தை கொண்டிருப்பதால் இரு படங்களுக்கும் ஒரே கதை இருக்க வாய்ப்பு குறைவுதான் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கினர்.