பெண்களுக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் துணை போகும் நபர்களுக்கு..!! பிரதமர் மோடி பேச்சு..!!
பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து செயல்களும் குற்றங்களே., அதை மன்னிக்க முடியாத பாவங்களில். இந்த குற்றச் செயல்களை செய்யும் குற்றவாளிகள் ஒருவர் கூட தப்பக் கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்..
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொடுரமாக செய்யப்பட்ட சம்பவம் , மும்பை அருகே 4 வயது பள்ளிச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் நேற்று நடந்த லட்சாதிபதி சகோதரி சம்மேளன நிகழ்ச்சியில் பிரதமர் மோடிபங்கேற்றுள்ளார்..
அப்போது பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதங்கள் எழுந்துள்ளது., அப்போது அவர் பேசியதாவது., நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே மிக முக்கியம்., இதைப் பற்றி நாந பலமுறை சொல்லியிருந்தாலும் ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் குடியாசு தின விழாவில் பேசியுள்ளேன்..
இந்தியாவில் உள்ள எந்த ஒரு மாநிலமானாலும், அங்குள்ள பெண்களின் வலியையும், கோபத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பெண்களுக்கு பெண்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து செயல்களும் குற்றங்களே., அதை மன்னிக்க முடியாத பாவங்களில். இந்த குற்றச் செயல்களை செய்யும் குற்றவாளிகள் ஒருவர் கூட தப்பக் கூடாது.. ஒவ்வொரு காவல் உயர் அதிகாரிகள்., துயர் சார்ந்த அதிகாரிகள்., அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் மாநில அரசிடமும் தெரிவித்து இருக்கிறேன்..
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்கக் கூடாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு துணை போகும் நபர்களும் தண்டிக்கப்பட வேண்டும். அது மருத்துவமனையோ, அரசாங்கமோ, போலீஸ் நிலையமோ எங்கு நடந்தாலும் சரி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நாட்டில் அரசாங்கம் மாறும். ஆனால் மக்களையும் பெண்களையும் பாதுகாப்பது நம் அனைவரின் மிகப்பெரிய பொறுப்பாகும். இந்த செய்தி அரசு நிர்வாகத்தில் மேலிடத்தில் இருந்து கீழே உள்ள ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..