ராகுல் காந்தி பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு..! தொண்டர்கள் கொடுத்த கிப்ட்..!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த தினம் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகர் தலைமையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 65 பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கியதுடன் ராகுல் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இரத்ததானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்துள்ளார்.
-பவானி கார்த்திக்