வெள்ளத்தில் மூழ்கிய அசாம்..!! ஆதரவின்றி தவிக்கும் மக்கள்..!!
வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் அசாம் மாநில முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.
அசாமில் 9 மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 9 மாவட்டங்கள் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. வெள்ளம் பாதிப்பால் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளது.
மேலும் பல்வேறு வீடுகளும் இடிந்து விழுந்துள்ளது.., இதனால் பல்வேறு மக்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இதுவரை 1,118 கிராமங்கள் நீரில் மூழ்கி இருக்கின்றனர்.
பக்சார், பர்பேடா, தரங்க், துப்ரி, கோல்பாரா, காம்ரூபா, லக்கிம்புர், நல்பாரி, உதல்குரி ஆகிய 9 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டிருப்பதாக அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த 9 மாவட்டங்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருக்கின்றனர்.
மூன்று பேர் உயிர் இழந்துள்ளனர், பல்லாயிரயம் கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப் பட்டுள்ளன.
தேஜ்பூர், நியாமதி காட் ஆகிய இடங்களில் மட்டும் பிரம்மபுத்திரா நதி அபாய கட்டத்தை தாண்டி ஓடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.. எனவே பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பினர். அசாம் மக்களை மீட்டு முகாமில் தங்க வைத்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் அசாம் முதல்வர் ஹிமந் பிஸ்வ சர்மாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.., இந்நிலையில் தவிக்கும் அசாம் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக அமித் ஷா, உறுதி அளித்துள்ளார்.
Discussion about this post