ஆவின் “இ-டெண்டர்” கான்ட்ராக்ட் மோசடி..! ஆதாரம் வெளியிட்ட வாகன உரிமையாளர்கள்..!!
மதுரையில் ஆவின் பால் பொருட்களை விநியோகம் செய்யும் வாகனங்களுக்கு கொடுக்கப் பட்டிருந்த இ டெண்டர் முடிந்தது.. டெண்டர் முடிந்து 4 நாட்கள் ஆகியும் அதற்கான மறு உரிமம் அளிக்கப் படாததால். மதுரையின் அனைத்து பகுதிகளில் இருந்தும்.., ஒவ்வொரு வண்டிக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே உத்தரவு கொடுக்க முடியும் என அதிகாரிகள் வாகன உரிமையாளர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
மதுரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவின் கடைகளுக்கு பால் பாக்கெட் விநியோகம் செய்ய 41 வழித்தடங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்ய இ டெண்டர் ஜூன் 22ம் தேதி நடந்துள்ளது.
அதில் 36 இடங்களில் ஒரு விண்ணப்பமும், மற்ற இடங்களில் இரண்டு விண்ணப்பமும் அனுப்பப்பட்டுள்ளது. டெண்டர் எடுக்கப்பட்ட அதே நாளில் வாகன ஓட்டிகளுக்கு ஒப்பந்தத்திற்கான அனுமதி உரிமம் அளிக்கப் பட்டுள்ளது.
ஆனால் இ டெண்டர் எடுக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகியும் இன்னும் ஒப்பந்த உத்தரவிற்கான உரிமம் வழங்கப்படாததால்.., உரிமையாளர்கள் ஆவின் அதிகாரிகளை அழைத்து வழித்தடம் அனுமதி வழங்க பேரம் நடத்தி வருகின்றனர். அதில் ஆத்திரமடைந்த உரிமையாளர்கள் உத்தரவு வழங்கப்பட்டதை குறித்து சில புகார்களை அளித்துள்ளனர்.
இது குறித்து உரிமையாளர்கள் கூறுவது.., அதிகாரிகளில் ஒருவர் எங்களை சந்தித்து வண்டிக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் டெண்டரை ரத்து செய்து விடுவேன். என மிரட்டு வதாக ஒரு ஆடியோ ஆதாரம் ஒன்றை காண்பித்துள்ளார். மேலும் எங்கள் உரிமங்களை காரணமின்றி கேன்சல் செய்து விட்டால்.., நாங்கள் நீதி மன்றம் செல்வோம் என்று கூறியுள்ளனர்.
இது குறித்து மதுரை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post