கோவை ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசாக கொடுத்த நடிகர் கமலஹாசன்..!!
கோவை காந்தி புரத்தை சேர்ந்த முன்னாள் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா. கோயம்புத்தூரின் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றவர். ஷர்மிளாவிற்கு தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் .., அவரை பாராட்டி வந்தனர்.., அவரை பற்றி பேசாத பத்திரிகையும் இல்லை.
ஆனால் சில தினங்களுக்கு முன்பு ஷர்மிளா பேருந்தை இயக்கி கொண்டிருக்கும் பொழுது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் “கனிமொழி”. ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணித்துள்ளார். அப்பொழுது அவரை பாராட்டி கனிமொழி அவர்கள் ஷர்மிளாவிற்கு கை கடிகாரம் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார்.
பின் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.., ஆனால் திருமதி கனிமொழி அவர்களை நடத்துனர் மதிக்காததால், அவர் மீது ஷர்மிளா புகார் அளித்துள்ளார்.., அதற்கு பேருந்து நிறுவனம் சரியான பதில் அளிக்காமல் “உன்னுடைய பப்ளீ சிட்டிக்கு எல்லாம் நிறுவனம் பொறுப்பல்ல.., நீ வேலையை விட்டு கிளம்பு என்று.., கூறியுள்ளது. இந்த செய்தி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது..,
இந்நிலையில் நடிகர் “கமலஹாசன்” பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு காரை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில்.., ” தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்” முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி, முதல் தனியார் பேருந்து ஓட்டுநர் தான் ஷர்மிளா. பெண்கள் தங்களின் ஆசைகள் வெளிப்படுத்த ஆசைப்படும் பொழுது அவர்களுக்கு அதற்கான ஆதரவு நம் கொடுக்க வேண்டும்.. ஷர்மிளாவின் இந்த ஓட்டுநர் கனவு எப்பொழுதும் நிலைத்து இருக்கட்டும் என கூறினார்..