கள்ளக்காதலியுடன் உல்லாசம்.. நேரில் கண்ட முதியவருக்கு நேர்ந்த சோகம்..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அருள்செல்வன்(25) இவர் அப்பகுதியில் உள்ள பெண் ஒருவரிடம் கள்ளத்தொடர்பில் இருந்திருக்கிறார்.
இதன்காரணமாக அருள்செல்வன் மற்றும் அவரது கள்ளக்காதலி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அருள்செல்வன் அவரது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருப்பதை அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்(60) என்பவர் நேரில் பார்த்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து அவரிடம் அருள்செல்வன் இதுகுறித்து வெளியே சொல்லவேண்டாம் என்று கேட்டுள்ளார். ஆனால் அருள்செல்வன் தனது கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருந்தது பற்றி சினிவாசன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அருள்செல்வன் சீனிவாசனிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதுடன் ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாள் எடுத்து சீனிவாசனின் முகம் மற்றும் கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி இருக்கிறார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அருள்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்