குளிர்பானம் குடித்த 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! தனியார் குளிர்பான ஆலையில் அதிகாரிகள் அதிரடி சோதனை..!!
திருவண்ணாமலையில் 10 ரூபாய் பாட்டில் குளிர்பானம் குடித்து சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு.. மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆய்வு.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் ஜோதிலட்சுமி தம்பதியினர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 9 வயதில் ரித்தீஷ் என்ற மகனும், 6 வயதில் காவியா ஸ்ரீ என்ற மகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில், இரண்டாவது மகள் காவியா ஸ்ரீ கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி தன் வீட்டின் அருகேவுள்ள பெட்டிக்கடையில் சிறுமி பத்து ரூபாய் குளிர்பான பாட்டிலை வாங்கி குடித்துள்ளார். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்திலேயே சிறுமி காவியா ஸ்ரீ மூச்சுத்திணறி, மூக்கிலும் வாயிலும் நுரை வந்த படி மயங்கி விழுந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு., மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்… அங்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிறுமியின் தந்தை ராஜ்குமார் காவல்நிலையத்தில் பத்து ரூபாய் மலிவுள்ள குளிர்பானம் குடித்ததாலேயே தன்னுடைய மகள் இறந்துள்ளாதால் மட்டும் இந்த புகாரை நான் கொடுக்கவில்லை இனி இதுபோன்று வேறு எந்த குழந்தையும் பாதித்து விடக்கூடாது அரசாங்கம் இதுகுறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ராஜ்குமார் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளார்.. இந்த குளிர்பானம் எங்கிருந்து விநியோகம் செய்யப்பட்டது..? சப்ளே செய்த vendors யார் என்பது பற்றி விசாரணை செய்ததில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள Dailee குளிர்பான ஆலையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது..
பின்னர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரிகள் சென்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள Dailee குளிர்பான ஆலையில் சோதனை நடத்தி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதன் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..