ரயிலுக்குள் தீ… வதந்தியை நம்பி ஓடும் ரயிலில் இருந்து குதித்த 3 பேர் பலி..
ஜார்கண்ட் மாநிலம் சாஸாராம் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், நேற்று சாஸாராம் இன்டர்சிட்டி விரைவு ரயில் வழக்கம் போல் சென்று கொண்டிருந்தபோது ரயிலில் தீப்பிடித்ததாக யாரோ ஒருவர் வதந்தியை பரப்பியதாக கூறப்படுகிறது.
மேலும் ரயிலின் தீப்பிடித்ததாக யாரோ ஒருவர் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் பொய்யான தகவல் கூறியதை அடுத்து அவர் ரயிலை நிறுத்தியுள்ளார்.
இது பயணிகள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனார் தீப்பிடித்ததாக பரவிய வதந்தியை நம்பி மூன்று பயணிகள் உயிர் பிழைப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது.
உயிரைக் காப்பாற்ற எண்ணி மூன்று பேர் கீழே குதிக்கும் நேரத்தில் மற்றொரு தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில் மோதியதில் பரிதாபமாக மூவரும் உயிரிழந்தனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தியை பரப்பிய வரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்