8 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக வருவாய் பற்றாக்குறை குறைகிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2022 – 23 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் திருக்குறளை மேற்கோள் காட்டி தாக்கல் செய்து வருகிறார்.
அதன்படி,பேசிய நிதியமைச்சர் கூறியதாவது:
“தமிழர் மரபு, பண்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.திமுக ஆட்சிக்கு வந்த பின் நான் தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக,வரும் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 4.61% இருந்து 3.80% ஆக குறைய வாய்ப்புள்ளது.
அந்த வகையில், ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது.மேலும்,வரும் நிதியாண்டில் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை இருக்கும்”,என்று தெரிவித்துள்ளார்.