5 பெண்களை ஏமாற்றிய சினிமா இயக்குனர்..! பெண் கொடுத்த புகார்..! வெளியான பகிர் தகவல்கள்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்காலை பகுதியை சேர்ந்தவர் பூர்ணிமா (41). இவர் கடந்த 18ஆம் தேதி அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பெரியவர்கள் முன்னிலையில் தனக்கும் லட்சுமி காந்தன் என்பவர்கும் 2-ம் திருமணம் நடந்தது.
அப்போது அவர் எங்களிடம் சினிமா டைரக்டராக பணியாற்றி வருவதாகவும் சில படங்களை தயாரித்துள்ளதாக கூறி திருமணம் செய்து கொண்டு பிறகு சென்னைக்கு அழைத்துச் சென்றார்.
நாங்கள் அங்கு இருக்கும்போது என் கணவர் அடிக்கடி இரவு நேரத்தில் பல பெண்களுடன் செல்போனில் பேசுவார். நான் அதைப் பற்றி கேட்டால் அவர் என்னை அடித்து திட்டுவார்.
நாங்கள் 5 வருடங்கள் சென்னையில் ஒன்றாக இருந்த நிலையில் திருவண்ணாமலையில் வீடு வாங்குவோம் என கூறி என்னை கணவர் அழைத்து வந்தார்.
பின்னர் என் பெற்றோர் வீட்டில் என்னை விட்டுவிட்டு அவர் மட்டும் சென்னைக்கு சென்று விட்டார். அவர் என்னை அடிக்கடி வந்து பார்த்து செல்லும் நிலையில் அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
மேலும் இது குறித்து விசாரித்த போது அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் சினிமா இயக்குனர் என்று கூறி இதுவரை 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.
அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகளிர் காவல் நிலையத்திற்கு இந்த புகார விசாரிக்கும் படி உத்தரவிட்டார்.
மேலும் அந்த உத்தரவின் படி வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் லட்சுமி காந்தனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்