தொடங்கிய முதற்கட்ட வேட்பு மனு தாக்கல்..!! தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிக்கை..!!
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், வேட்பாளருடன் 5 நபர்கள் மட்டுமே வரவேண்டும் என்று, வரும் 27 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
28-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படவுள்ள நிலையில், 30ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளருடன் வருபவர்கள் மேள தாளங்கள், டிரம்ஸ் போன்றவை இசைக்க அனுமதி கிடையாது என்றும், தேர்தல் ஆணைய விதிகளின் அடிப்படையில் வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் பின்பற்றிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு பலத்த காவல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர், மேகாலயா மற்றும் நாகாலந்து ஆகிய மாநிலங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் ஒருசில தொகுதிகளில் வாக்குப்பதிவு 3 மணியுடன் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..