“பிரச்னைகளுக்காக போராடுவது தான் எனது வாழ்வின் மையம்..” வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி கடிதம்…!!
மக்கள் பிரதிநிதியான எனது அரசியல் பயணத்தில் மக்கள் ஆகிய நீங்கள் எனக்கு வழிகாட்டிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருக்க வேண்டும் என பிரியங்கா காந்தி வயநாடு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரார் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
அதற்கான வேட்பு மனுவை கடந்த அக்டோபர் 23ம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்., அப்போது சோனியா காந்தி, கணவர் ராபர்ட் வதேரா, சகோதரர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உடனிருந்தனர்.
அதேபோல் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாசும், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் சத்யன் மோகெரியும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தற்போது வயநாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வயநாடு மக்களுக்கு பிரியங்கா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
“மக்கள் பிரதிநிதியான எனது அரசியல் பயணத்தில் மக்களாகிய நீங்கள் எனக்கு வழிகாட்டியாககவும், ஆசிரியர்களாகவும் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
இந்த அரசியல் பயணமானது போராளிக்கான பயணமானது அல்ல ஜனநாயகம், நீதி, அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பிரச்சனைகள் எதிர்கொள்வதற்கான பயணமாக நான் பார்க்கிறேன்..
உங்களுக்காக போராடுவது தான் எனது வாழ்வின் மையமாக இருக்கும் உங்கள் ஆதரவுடன் எதிர்காலத்திற்காக இந்தப் போரை நான் முன்னெடுத்துச் செல்வேன்.., நீங்கள் என்னை எம்.பி.யாக்க முடிவு செய்தால் உங்களுக்கு மிகவும் நன்றியுடன் இருப்பேன்”
என இவ்வாறே அவர் குறிப்பிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..