பெண் அதிகாரி மர்ம முறையில் கொலை..!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் துணை இயக்குனராக பிரதிமா என்ற பெண் அதிகாரி பணிபுரிந்து வந்தார்..,
கடந்த 8 வருடங்களாக பணி புரிந்துவரும் இவர் நேற்று இரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பிராதிமாவின் கணவரும், அவரின் மகனும் தீர்த்தஹள்ளிக்கு சென்றுள்ளனர்.
பின் நேற்று இரவு பிரதிமாவின் அண்ணன் பிரபா இவருக்கு போன் செய்துள்ளார், பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை.., என்பதால் பதறி போன அண்ணன் விடியல் காலை 4மணி அளவில் தங்கையின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்று பார்த்த போதே அவருக்கு பேர் அதிர்ச்சி காத்துக்கிடந்தது, பிரதிமா ரத்த வெள்ளத்தில் உடலில் ஆங்காங்கே.., கத்தி குத்துடன் கீழே கிடந்துள்ளார்..
பதறி போன அண்ணன், உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்..
டிசிபி ராகுல் குமார் ஷகாபுர்வத் இந்த மர்ம கொலை குறித்து கூறுவது.., இரவு காரில் வீட்டிற்கு வந்துள்ளார், குழந்தை மற்றும் கணவர் வெளியே சென்ற அரை மணி நேரத்தில் சில மர்ம நபர்கள் சுவர் ஏறி குதிதற்கான தடம் உள்ளது.
மேலும் வந்த மர்ம நபர்கள்.., முகமூடி அணிந்து இருந்ததால்.., யார் என்று தெரியவில்லை, கொலை செய்யப்பட்டவர். நேர்மையான அதிகாரி என்பதால் பின்னணியில் யார் என விசாரணை தொடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post