சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மும்பையில் பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் மட்டுமே பணி புரியலாம் என்று போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் விதத்தில் உலக அளவில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த தினத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மும்பையில் பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் மட்டுமே பணி புரியலாம் என்று போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே அறிவித்துள்ளார்.
அதன்படி,குடும்பம் மற்றும் பணி சூழல் ஈடுகட்டும் விதமாக இன்று முதல் மூன்று புதிய ஷிப்டுகளின் அடிப்படையில் மும்பையில் பெண் காவலர்களுக்கு இனி 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிவார்கள் என தெரிவித்துள்ளார்.
பெண் பணியாளர்களுக்கு ஆரோக்கியமான வேலை-வீடு சமநிலையில் உதவுவதே இந்த உத்தரவின் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மகாராஷ்டிர காவல்துறையின் தலைமை இயக்குநராக இருந்த பாண்டே 2022 ஜனவரியில் எட்டு மணி நேரப் பணியைத் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.