பெண் மருத்துவர் கொலை… நீதி கேட்டு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட மருத்துவர்கள்..!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் கருப்பு பாட்ஜ் அணிந்து ஆர்பாட்டம். மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைகண்டித்து நாடு முழுவதும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்ய மருத்துவர்கள் அடையாள வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் முதுநிலை டீன் ரத்தினவேலு, டீன் திருநாவுக்கரசு தலைமையில் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு பெண் மருத்துவர்கள் பாதுகாப்பு வேண்டும் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முதுநிலை டீன் ரத்தினவேல் கூறும்போது கொல்கத்தா மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதில் மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது. அவர்களுக்கு குரிய தண்டனை மத்திய அரசு வழங்க வேண்டும் தனி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
-பவானி கார்த்திக்