மருத்துவர்களின் போராட்டம்.. புறநோயாளிகள் கடும் அவதி..
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், பயிற்சி மருத்துவராக பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். கடந்த 8-ஆம் தேதி அன்று, அவர் இரவு நேர பணியில் இருந்துள்ளார்.
அடுத்த நாள், அந்த பெண் மருத்துவர், மருத்துவமனையில், சடலமாக கிடந்துள்ளார். இதுதொடர்பான வழக்கை, முன்பு காவல்துறையினர் நடத்தி வந்த நிலையில், தற்போது சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் விசாரணையில், அந்த பெண் மருத்துவர், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள மருத்துவருக்கு, நீதி கிடைக்க வேண்டும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடைபெற்று வருகிறது.
மருத்துவர்களின் இந்த போராட்டத்தால், புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
-பவானி கார்த்திக்