மூடப்பட்டிருந்த ட்ரம்மில் 20 வயதுக்கு மேல் இருக்கும் பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் இருந்ததை அடுத்து அங்கிருந்த பணியாளர்கள் புகாரளித்தனர்
பெங்களூரு யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் எண் 1ல் ஒரு ட்ரம்மில் இருந்து துர்நாற்றம் வருவதை கண்டு துப்புரவு பணியாளர்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது. தற்போது வரை அந்தப் பெண் யார் என்று அடையாளம் தெரியவில்லை.மேலும், இந்த சடலம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பழமையானதாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனை அடுத்து அந்த பெண்ணின் சடலம் கைப்பற்றபட்டுன் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது இந்நிலையில், அந்த பெண் யார் என்று கண்டறிய தடவியல் நிபுணர்கள் அப்பகுதியில் தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர்