தொடரும் விவாசாயிகளின் போராட்டம்..! நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்..!!
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்தும், பானைகளை உடைத்தும் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் விவசாயக குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தமிழகத்துக்குரிய தண்ணீரை கர்நாடக அரசு தொடர்ந்து தரமறுத்து வருவதை கண்டித்தும், அதேபோல் காவேரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதை கண்டித்தும், உடனடியாக காய்ந்து வரும் குறுவை சாகுபடியை காப்பாற்ற மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக தண்ணீர் காவடி எடுத்து வந்து பானைகளை உடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், கூட்ட அரங்கம் விவசாயிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
Discussion about this post