அகில இந்தியா ரஜினி மக்கள் இயக்க மாநில தலைமை நிர்வாகியான வி.எம் சுதாகர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரின் இறப்பிற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகரின் கல்லூரி நண்பரும் அவரது ரசிகர் மன்ற மாநில தலைமை நிர்வாகியாகவும் இருந்த வி.எம் சுதாகர் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். ரஜினியின் கல்லூரி பருவத்திலிருந்து நண்பர்களாக இருந்த இவர் ஆரம்பத்தில் ரஜினி ரசிகர் மன்ற தலைமை நிர்வாகியாக இருந்தார். பின்னர் மக்கள் இயக்கமாக மாற்றிய பின் அதற்கும் அவர் தலைமை நிர்வாகியாக நியாமிக்கப்பட்டு ரஜினியுடன் நீண்ட காலம் இருந்தார். 71 வயதான அவருக்கு கிட்னி பிரச்சனையால் அவதிபட்டு வந்தார்.
என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும். @SudhakarVM
— Rajinikanth (@rajinikanth) January 6, 2023
நீண்ட காலமாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நடிகர் ரஜினி மருத்துவ செலவை ஏற்றுக்கொண்டு உதவினார். இந்நிலையில் உடல்நிலை மோசமான கட்டத்தை எட்டியதால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் ட்விட்டரில் செய்தி தெரிவித்துள்ளார். அதில், என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரஜினி மக்கள் மன்ற சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.