பிரபல ரவுடி சீர்காழி சத்தியா துப்பாக்கி வழக்கு..! முக்கிய குற்றவாளி கைது..! பின்னணியில் அந்த கட்சியா..?
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் அலெக்ஸ் சுதாகர் நேற்றைய முன்தினம் இரவு அவரது பிறந்தநாள் விழாவை நண்பர்களுடன் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் ரவுடி சீர்காழி சத்தியா கலந்து கொண்ட பின்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்றுள்ளார்.
அப்பொழுது சோதனை சாவடியில் இருந்த போலீசார் காரை மடக்க அங்கிருந்த காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற சீர்காழி சத்தியாவை போலீசார் பிடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் ரவுடி சத்தியாவை விசாரித்தபோது நண்பர்கள் இருப்பிடம் காட்ட சென்றபோது உடன் சென்ற உதவி ஆய்வாளர் ரஞ்சித்குமாரை தக்கியபோது போலீசார் சீர்காழி சத்தியாவை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.
மேலும் சத்தியாவிடமிருந்து கள்ளத்துப்பாக்கி ஒன்றை போலீசார் கைப்பற்றியதாக போலீசார் கூறினர். சீர்காழி சத்தியா, தஞ்சாவூர் பால்பாண்டியன், திருவாவூர் மாரிமுத்து, சென்னை அலெக்ஸ் ஆகியோர் மீது உதவி ஆய்வாளர் திருநாவுகரசு கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார்., பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாலர் அலெக்ஸ் சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான பால்பாண்டியன், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 42 வயதான மாரிமுத்து ஆகிய இருவரை போலீசார் கைது செய்து தற்பொழுது சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மேஜிஸ்திரேட் கே.கார்த்திக் முன்பாக ஆஜர்படுத்தி பின்பு வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
– லோகேஸ்வரி.வெ