பிரபல ரவுடி துரை சுட்டு கொலை..! பரபரப்பான புதுச்சேரி..!
திருச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ரவுடி “துரைசாமி” இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி, உட்பட 70 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அதில் 1 கொலை வழக்கில் மட்டும் விடுதலை ஆன இவர். மீதம் 3 கொலை வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் அவர் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் ரவுடி துரை வம்பன் காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரவுடி துரையை போலீஸார் பிடிக்க சென்றனர். அப்போது அவரை சுற்றி வளைத்த போது போலீஸாரை தாக்கினார். இதையடுத்து தற்காப்புக்காக அவரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்த ரவுடி துரை மீது, புதுச்சேரி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது குறிப்பிடதக்கது..
ரவுடி துரை காவலர்களால் சுட்டு கொலை செய்யப்படுள்ள சம்பவம் மற்ற ரவுடிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..