பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு காவல் அதிகாரி..!!
புதுச்சேரியில் விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி ரோடியர் பேட் பகுதியை சேர்ந்தவர் சதீஸ். பிரபல ரவுடியான இவர் மீது, புதுச்சேரி காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்ற போது அவர்கள் அனைவரும் மது போதையில் இருந்ததால் திரையரங்கு ஊழியர்கள் அனுமதிக்கவில்லை என்பதால் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்பு ஆத்திரமடைந்த அந்த கும்பல், திரையரங்கு ஊழியர்களை தாக்கியது மட்டுமன்றி அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.
இந்த சம்பவம் குறித்து திரையரங்கு உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிந்து தலைமறைவாக இருக்கும் சதீஸ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், காவல் துறையினர் கணவர் சத்தீஷை தேடி இரவு நேரங்களில் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுப்பதாகவும், வேலை செய்யும் இடத்திற்கு தகாத வார்த்தைகளால் மிரட்டியதாகவும்,
சத்தீஷின் மனைவி தஸ்லீம் பேகம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து, தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post