கள்ள காதல் மோகம்..!! காதலனின் வெறி செயலால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!!
திருப்பத்தூர் அடுத்த எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகள் இந்துமதிக்கும் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் கணவருடன் சண்டை போட்டு கொண்டு இந்துமதி அம்மா வீடான காந்திநகர் வந்துள்ளார்.., நேற்று மாலை வீட்டில் இந்துமதி தனியாக இருந்த நிலையில் திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் வந்து பார்த்தபோது முகம் மற்றும் வெட்டு காயங்களுடன் தரையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.. பின்னர் அவரை மீட்ட உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்..
பின்னர் இதுகுறித்து திருப்பத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.., அப்போதே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இந்துமதிக்கு அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் அஜித் குமார் என்பவரும் ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்துள்ளனர்.. இந்த காதல் விவகாரம் அவரவர் வீட்டில் தெரிய வர கார்த்திக் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
கணவருடன் சண்டை போட்டு கொண்டு அம்மா வீட்டிற்கு வந்த இந்துமதி மீண்டும் அஜித்தை சந்தித்து பேசியுள்ளார்.., பழைய காதல் இவர்களுக்குள் மலரவே அடிக்கடி இருவரும் பேசி வெளியே சுற்றி வந்துள்ளனர்..,
இந்நிலையில் இந்துமதி திடீரென அஜித்திடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.., அஜித் வழிய சென்று பேசினாலும் அவர் பேசாமல் புறக்கணித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அஜித் குமார் நேற்று மாலை இந்துமதியை சந்தித்து பேசியுள்ளார்.. அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரா மாறியாக முகம் மற்றும் இந்துமதியின் உடம்பில் பல்வேறு பகுதிகளில் சரா மாறியாக வெட்டி விட்டு தப்பியுள்ளார்.
அதன் பின் அக்கம் பக்கத்தினர் இந்துமதியை மீட்டு மேலும் இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதனை அறிந்த அஜித்குமார் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தானாக சென்று சரணடைந்து இந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் இந்துமதிக்கு 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..